Disqus Shortname

கன­ரக வாக­னங்­களால் வலு­வி­ழந்­தது திரு­முக்­கூடல் பாலம்

உத்­தி­ர­மேரூர்:கல் குவா­ரி­களில் இருந்து, இரவு, பக­லாக இயக்­கப்­ப­டு­கின்ற கன­ரக வாக­னங்­களால் திரு­முக்­கூடல் ஆற்றுப்பாலம் வலு­வி­ழந்து, சேத­மாகும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.உத்­தி­ர­மேரூர் ஒன்­றியம் சால­வாக்கம் அடுத்­துள்­ளது திரு­முக்­கூடல் கிராமம். பாலாறு, செய்­யாறு, வேக­வதி ஆகிய ஆறுகள் சங்­க­மிக்­கின்­றன. இப்­ப­கு­தியில் பாலாற்றின் குறுக்கே, பழை­ய­சீ­வ­ரத்தை இணைக்க, 1 கி.மீ., சாலையில், கடந்த 2008ம் ஆண்டில், ஆற்றுப்­பாலம் கட்­டப்­பட்­டது.திரு­முக்­கூடல், மதுார், புள்ளம் ­பாக்கம், அருங்­குன்றம், சிறு­மை­யிலுார், ஆனம்­பாக்கம், படூர், பழ­வேரி, அரும்­பு­லியூர், சால­வாக்கம் உள்­ளிட்ட, 20க்கும் மேற்­பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை பயன்­ப­டுத்­து­கின்­றனர்.
துாண்­களை சுற்றி...காஞ்­சி­பு­ரத்தில் இருந்து, டி55 நெய்­யா­டி­வாக்கம், டி55ஏ அரும்­பு­லியூர், டி55பி சிறு­மை­யிலுார், டி81 படூர், டி36 ஆனம்­பாக்கம், டி7 நெற்­குன்றம், 80 சால­வாக்கம் ஆகிய அரசு பேருந்­து­களும், தனியார் பேருந்­து­களும் இந்த மேம்­பா­லத்தின் வழி­யா­கத்தான் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.
இந்­நி­லையில், திரு­முக்­கூடல் கிரா­மத்தை அடுத்­துள்ள, மதுார், பினாயூர், குண்­ண­வாக்கம், பொற்­பந்தல் மற்றும் பழ­வேரி ஆகிய பகு­தி­களில், கல்­கு­வா­ரிகள் உள்­ளன.
இவற்றில் இருந்து, கல் ஏற்றி செல்லும் கன­ரக வாக­னங்கள், திரு­முக்­கூடல் ஆற்றுப்­பாலம் வழி­யாக செல்­கின்­றன. இந்த கன­ரக வாக­னங்கள் பகல் மட்­டு­மின்றி, இரவு நேரங்­க­ளிலும் தொடர்ந்து இயக்­கப்­ப­டு­கின்­றன.
பாலத்தை தாங்கி நிற்கும் துாண்­களை சுற்றி, மணல் எடுக்­கப்­பட்டு விட்­டதால், பாலம் பல­மி­ழந்து வரு­கி­றது. இதனால், இப்­பா­லத்தில் இணைப்­பு­களின் இடை­வெ­ளி­யும் அதி­க­மாகி விரிசல் ஏற்­பட்­டுள்­ளது மற்றும் பாலத்தின் மேல் அமைக்­கப்­பட்­டுள்ள ரப்பர் சீட்­களும், சேத­மடைந்து வரு­கின்­றன.
கல் குவாரியில் இருந்து...இது­கு­றித்து, அப்­ப­குதியைசேர்ந்த உத­ய­குமார் கூறியதாவது:பாலாற்றில் பல ஆண்­டு­களுக்கு முன் கட்­டப்­பட்­டுள்ள, பல பாலங்கள் உறு­தி­யாக நிற்­கின்­றன. ஆனால், 8 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் கட்­டப்­பட்ட திரு­முக்­கூடல் ஆற்றுப்­பாலம்,பழு­த­டைந்து உள்­ளது.
இதற்கு காரணம், இப்­ப­கு­தியை சுற்றி உள்ள கல்­கு­வா­ரி­களில் இருந்து, தினமும் வாக­னங்கள் இரவு, பக­லாக அதிக அள­வி­லான லோடு ஏற்­றிச்­செல்வ­து தான். கன­ரக வாக­னங்­களில் ஏற்­படும் அதிக அள­வி­லான லோடினால், பாலம் எடை­யினை தாங்­காமல், அதிர்­வுக்­குள்­ளா­கி­றது. எனவே, பாலம் பழு­த­டை­யாமல் பாது­காக்க, ஆற்றுப்­பா­லத்­திற்கு அருகே நல்ல நிலையில் உள்ள, பழைய சாலையில், லோடு ஏற்றி செல்லும் கன­ரக வாக­னங்­களை இயக்க நெடுஞ்­சா­லைத்­துறை நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments