Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

உத்திரமேரூர் 02/06/2023
 உத்திரமேரூர் அருகே சிறுங்கோழி கிராமம் முதல் கட்டியாம்பந்தல் கிராமம் வரை சுமார் 6 கி.மீ தொலைவு கொண்டு சாலை பழுதடைந்து காணப்பட்டது. இதனால் பெருங்கோழி, சின்னமாங்குளம், கட்டியாம்பந்தல், பாப்பநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் இந்த சாலையினை சீரமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையின் பேரில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா இன்று நடைபெற்றது. விழாவில்
உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் டி.குமார், நகர செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ கலந்து கொண்டு புதிய தார் சாலை பணியினை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மேலும் சாலையினை தரமானதாகவும் விரைந்து முடித்திடவும் உத்தரவிட்டார். நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் திமுக நிர்வாகிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments