Disqus Shortname

மணல் கொள்ளையில் ஐகோர்ட்டு கண்டனம் ;காஞ்சீபுரம் கலெக்டர் இடைநீக்கம்

உத்தரமேரூர் அக், 12
மணல் கொள்ளை தொடர்பாக, நீதிபதி கண்டனத்தை அடுத்து, காஞ்சீபுரம் கலெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மணல் கொள்ளை&கோர்ட்டில் வழக்கு
கோவையைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பாளைய சீவரம், கள்ளபிராண்புரம் ஆகிய கிராமங்களில் 44,000 லாரி லோடு மணலை மலைபோல் குவித்து வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்கிறார். உரிமம் இல்லாமல் இவர் மணல் விற்பனை செய்வதற்கு அதிகாரிகளும் உடந்தை என்று சென்னை ஐகோர்ட்டில், பூந்தமல்லி வட்டார ஆற்று மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் விசாரித்து, கடந்த மாதம் 19&ந் தேதி ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதில், Òகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பெருமளவு ஆற்று மணல் கொள்ளை நீண்டகாலமாக நடந்து வருகிறது. இது குறித்து அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இரண்டு கிராமங்களில் சட்டவிரோதமாக மலைபோல் குவித்துவைத்துள்ள ஆற்றுமணல் பற்றி அந்த அதிகாரிகளுக்கு எப்படி விவரம் தெரியாமல் போனது? எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ள ஆற்று மணல் கொள்ளை குறித்து, சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். 2011&ம் ஆண்டில் இருந்து இன்று வரை பணியாற்றிவரும் அதிகாரிகள் பற்றியும் விசாரிக்க வேண்டும். இவர்களது நடவடிக்கையால் அரசுக்கு எவ்வளவு தொகை இழப்பீடு? என்பதையும் மதிப்பீடு செய்து தலைமை செயலாளருக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்Ó என்று உத்தரவிட்டார்.
கலெக்டர் இடைநீக்கம்
இந்த நிலையில், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் சித்திரசேனனை இடைநீக்கம் செய்து தமிழக அரசு  உத்தரவிட்டது. மணல் கொள்ளை குறித்து, ஐகோர்ட்டு தெரிவித்த கண்டனத்தைத் தொடர்ந்து, கலெக்டர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments