Disqus Shortname

உத்திரமேரூர் ஒன்றிய நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

உத்திரமேரூர் 
உத்திரமேரூர் அடுத்த வெங்கச்சேரி கிராமத்தில் உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைப்பெற்றது. உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞான்சேகரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் பாரிவள்ளல், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், பொதுக் குழு உறுப்பினர் பொன்.சசிகுமார், கிளைக் கழக துணை செயலாளர் இருமரம் பெ.சங்கர், கிளை செயலாளர் கன்னிகுளம் செல்லன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜீவாசங்கர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் ஆரணிமாலா ஆகியோர் கலந்து கொண்டு திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை பட்டியலிட்டு பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர். மேலும் திமுக அரசு பொது மக்களுக்காக கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதேப் போல் ஆணைப்பள்ளம், கருவேப்பம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் 2 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

No comments