Disqus Shortname

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் புது வாழ்வு திட்டப்பணிகள் குழுவினர் ஆய்வு

உத்தரமேரூர் அக்,8
தமிழ் நாடு அரசின் புதுவாழ்வு திட்த்தின் மக்கள் நிலை ஆய்வு குறித்த பயிற்சியினை பெறுவதற்காக மாநில வல்லுநர்களுடன் மேற்கு வங்காளம், ஒரிஸ்ஸா, பீகார் போன்ற 18 மாநிலங்களில் உள்ள 30 தேசிய வாழ்வாதார இயக்க அதிகாரிகள் ஆதவப்பாக்கம் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் பயிற்சியுடன் வறுமை ஒழிப்பு சங்க செயல்பாடுகளை திங்கட்கிழமையன்று கேட்டறிந்தனர். இப்பயிற்சி ஆய்விற்கு ஆதவப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் விமலாபிரகாசம் வரவேற்றார். மாவட்ட உதவி திட்ட மேலாளர் ஆர்.சுபான் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயல்பாடுகளில் ஒன்றான மக்கள் நில ஆய்வினை அறிந்து இதர மாநிலங்களில் செயல்படுத்தி வரும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் புதுவாழ்வு திட்ட மக்கள் நில ஆய்வினை முன்னோடியாக எடுத்து செயல்படுத்த 18 மாநிலங்களில் அரசு அதிகாரிகள் பயிற்சியினை மேற்கொண்டனர். அப்போது இலக்கு மக்கள் ஆய்வு  வரைபடம் , தரம்பிடித்தல், இலக்கு மக்கள் பட்டியலுக்கு கிராம சபை ஒப்புதல் பெறுதல் வறுமை ஒழிப்பு சங்கம் அமைத்தல் மகளிர் குழு கூட்டம் உருவாகுதல். இளைஞர் தரும் திறன் வளர்ப்பு பயிற்சி ஆகியவைகள் அனைத்தும் பயிற்சியில் மேற்கொள்ளப்பட்டது. பாலேஸ்வரம் பகுதி அணி தலைவர் கோ.மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments