Disqus Shortname

இராவத்தநல்லுாரில் ஆற்றுநீர், கிணற்று நீர் கலப்பதால் காய்ச்சல் ஏற்படுவதாக பொது மக்கள் தகவல்

உத்தரமேரூர்அக்,06
உத்தரமேரூர் தாலுக்கா ராவத்தநல்லுார்  கிராமத்தில்  மர்மகாய்ச்சலால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பேரில் களியாம்பூண்டி மருத்துவர் என்.ரூபலட்சுமியை  விசாரித்ததில் ராவத்தநல்லுார் மற்றும் காலணியில் 135 வீடுகள் உள்ளது.  1471 பொது மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக  பொதுமக்கள் தண்ணீரை நிரப்பிவைத்து மூடாததால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் மருத்துவ  குழுவினருடன் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை நடத்தி மருந்து மாத்திரைகளும் வழங்கியுள்ளோம். சுகாதாரமாக இருக்க குடிநீரை காய்ச்சி குடிக்க சொல்லியும் யாரும் கேட்பதில்லை அத்துடன்  இங்குள்ள குடிநீர் தேக்க தொட்டியில் ஆற்றுநீரும், கிணற்றுநீரும் ஒன்றாக இணைந்து வருவதால் காய்ச்சல் சளி, இருமல், ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கூறினார்கள்,  மேலும் இந்த கிராம முழுவதும் கொசு ஒழிப்பு பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு பணி மேற்கொண்டுள்ளனர். அக்குடிநீரில் ஆற்று நீர் மட்டும் விடப்பட்டு தினமும் குளோரின் மாத்திரைகள்  போடப்பட்டு  உள்ளதாக  கூறினார். இக்கிராம மக்கள் நலமாக இருப்பதாகவும் தினமும் மருத்துவர் மற்றும் பணியாளர்கள் சென்று  நோய் பரவாமல் இருக்க  பொது மக்கள்   குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டினர். இக்கிராமத்தை தொடர்ந்து தீவிரமாக  கண்காணித்து வருவதாக கூறினார். மருத்துவர்.

No comments