Disqus Shortname

உத்தரமேரூரில் இன்று சட்ட மன்ற தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்,

உத்தரமேரூர் அக்,02
காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி செயல்வீரர்கள், வீராங்கணைகள் ஆலோசனை கூடடம் இன்று புதன்கிழமையன்று உத்தரமேரூர் இந்திராணி திருமண மண்டபத்தில் காலை 11 மணி அளவில் நடக்கிறது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன், தலைமை தாங்குகிறார். கிழக்கு, மேற்கு ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகிக்கின்றனர். உத்தரமேரூர் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் என்.எம்.வரதராஜிலு வரவேற்கிறார்கள் கழக மருத்துவ அணி தலைவரும், நாடாளுமன்ற (தனி) தொகுதி பொறுப்பாளருமான டாக்டர்.வா.மைத்ரேயன், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் சா.இராஜேந்திரன், காஞ்சிபுரம் தொகுதி   சட்ட மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம், மாவட்ட இளைஞரணி செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்தியா ஒன்றியக்குழு துணைத்தலைவர்  அ.ரவிசங்கர் மாவட்ட பாசறை செயலாளர் டி.சந்திரமெளலி உட்பட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். பேரூர் கழக செயலாளர் கே.லட்சுமணன் நன்றி கூறுகிறார்.

No comments