Disqus Shortname

பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

உத்திரமேரூர், அக்,21 :

உத்திரமேரூரில் பஸ் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடம் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
 மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் கே.கிருஷ்ணராஜ் உத்தரவின் படி உத்திரமேரூர் பஸ் நிலையம், மருத்துவமனை வளாகம், மார்க்கெட் உள்பட பொது மக்கள் கூடும் பல இடங்களில் புகை பிடிப்பவர்களை தடுத்து, அவர்களிடமிருந்து அபராதத் தொகை வசூலித்தனர். மொத்தம் ரூ1,100 வசூலிக்கப்பட்டது. இப்பணியில் உத்திரமேரூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.தாமரைச்செல்வன், சுகாதார ஆய்வாளர்கள் இ.பால் ஏசுதாஸ், எஸ்.தமிழ் செல்வி மற்றும் பயிற்சி பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு இல்லாத கடைக்காரர்களை எச்சரித்தனர்.அவர்களுக்கு புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள், நோய்கள் பற்றியும், புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படும் நிலை பற்றியும் விளக்கி கூறி அறிவுரை வழங்கினர்

No comments