Disqus Shortname

உத்தரமேரூரில் அ.தி.மு.க 42-வது ஆண்டு துவக்கம் எம்.ஜீ.ஆர் சிலைக்கு மாலை அணிவிப்பு

உத்தரமேரூர் அக்,17
அ.இ.அ.தி.மு.க வின் 42-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு
வியாழக்கிழமையன்று உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் உள்ள எம்.ஜீ.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றி பொது மக்களுக்கு லட்டுகள் வழங்கினார். ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர். அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தருமன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஓ.வி.வரதன், மாவட்ட இளைஞரணி
இணை செயலாளர் பொ.சசிக்குமார், புலியூர் ஊராட்சி மன்றத்தலைவர் பழநி ஒன்றிய எம்.ஜீ.ஆர். மன்ற செயலாளர் தண்டரை டி.தணிகைவேல், அ.பி.சத்திரம் கோ.பெருமாள் ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பி.வில்வபதி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments