Disqus Shortname

உத்திரமேரூரில் ஏ.பி. சத்திரம் - வேடபாளையம் சாலைப்பணி தொடங்க வலியுறுத்தல்

உத்தரமேரூர் அக்-23 :

உத்திரமேரூரை சுற்றி 18க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து 1000க்கு மேற்பட்ட தனியார், அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தினமும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மதுராந்தகம், வந்தவாசி மற்றும் சென்னை ஆகிய இடங்களுக்கு சென்று வருகின்றனர். மறைமலைநகர் பரனூர், சென்னை ஆகிய இடங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு செல்லும்  கனரக வாகனங்கள் மற்றும் கம்பெனி ஊழியர்கள் வாகனங்களும் உத்திரமேரூர் பஜார் வீதி வழியாக சென்று வருகின்றன. கம்பெனி வாகனங்கள் ஊழியர்களை அழைத்துச் செல்வது மட்டுமின்றி, பொருட்கள் கொண்டு செல்லவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தப்படுகிறது. இதனால், பஜார் வீதியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
அதுமட்டுமின்றி கம்பெனி வாகனங்கள் அதிவேகமாக வருவதால் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. மேலும் சாலை பழுதாகிவிடுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் தனியார், அரசு நிறுவனங்களில் பணிபுரிய செல்பவர்கள்  குறிப்பிட்ட நேரங்களுக்கு செல்ல முடியாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே கம்பெனி வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்றுவர தடை செய்ய வேண்டும். அந்த வாகனங்கள் சென்றுவர புறவழிச்சாலை அமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ரூ7 கோடி மதிப்பில் ஏ.பி. சத்திரம் முதல் வேடபாளையம் வரை 4.2 கி.மீ. நீளத்துக்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என அமைச்சர் பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் சட்ட பேரவையில் தெரிவித்தார். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த பணி அறிவிப்பு, எவ்வித நடவடிக்கை எடுக்க படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சாலை அமைத்தால் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்குச் சென்றுவர ஏதுவாக இருக்கும். எனவே இந்த சாலை பணியை விரைவில் முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments