Disqus Shortname

இருசக்கர வாகனஆக்கிரமிப்பால் நோயாளிகள் அவதி

http://media.dinamani.com/article1295789.ece/alternates/w460/c8UTRMUP.jpg
உத்தரமேரூர் அக்,02உத்திரமேரூரில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. உத்திரமேரூர் அதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இம்மருத்துவமனை வளாகத்தில் தனியார் நிறுவனத்திற்கு செல்பவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது.
இதுபற்றி கடந்த ஜூன் 4ம் தேதி காஞ்சி மாவட்ட கலெக்டர் சித்தி ரசேனன் மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்தியபோது, அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி உத்தரவிட் டார்.
இதை அடுத்து, உத்திரமேரூர் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் வாகனங்களை அப்புறப்படுத்தியது. தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்ந்துள்ளது.
இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தங்களது வாகனத்தை நிறுத்தவும் சிகிச்சை பெற்று செல்லவும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இவ்வாகனங்களை அகற்ற அப்பகுதி மக்களும் நோயாளி களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments