Disqus Shortname

இலவச பொது மருத்துவ முகாம்.

உத்தரமேரூர் அக்,23
தமிழ்நாடு அரசின் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் உத்தரமேரூர் ஒன்றியத்தில் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மருத்துவமனை  மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி பாலேஸ்வரம் பகுதிக்குட்பட்ட தோட்டநாவல் ஊராட்சியில் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் வரலட்சுமிகருணாநிதி தலைமை தாங்கினார். மீனாட்சி பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் கே.ராஜா மற்றும்  புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர்  பி.தனசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். முகாமில் 200 நபர்கள் பங்கேற்றனர். 35நபர்கள்  மேல்சிகிச்சைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர். முகாமில் கண்பரிசோதனை, இரத்தஅழுத்தம், இருதயபரிசோதனை, எலும்பு சம்பந்தப்பட்டசிகிச்சை, மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவத்துடன் இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமிற்குறிய ஏற்பாடுகளை பாலேஸ்வரம் பகுதி அணித்தலைவர் ஜெ.மணிகண்டன், பி.சுனில்குமார், கே.கலைவாணன், ஆர்.ஆனந்குமார் செய்திருந்தனர். ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் டி.கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். ஊராட்சி துணைத்தலைவர் எஸ்.கே.வையாபுரி நன்றி கூறினார்.

No comments