Disqus Shortname

இரத்த தான முகாம்

உத்தரமேரூர் செப்,30
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் திங்கட்கிழமையன்று இரத்ததான முகாம் நடந்தது. ரெட்ரிப்பன் கிளப் நடத்திய முகாமிற்கு காஞ்சி மீனாட்சி மெடிக்கல் கல்லுாரி மருத்துவமனை இரத்த வங்கி மெடிக்கல் அலுவலர் டாக்டர்.ஜீ.எம்.தமிழ்செல்வி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் சுப.நடராஜன் முன்னிலை வகித்தார். கணினி பயன்பாட்டுதுறை தலைவர் கோ.இராஜ்குமார் வரவேற்றார். 70 மாணவர்கள் இரத்ததானம் அளித்தனர். செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் இரா.தனசேகர் நன்றி கூறினார்.

No comments