Disqus Shortname

காஞ்சிக்கு புதிய கலெக்டர்… கோவை, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்ட கலெக்டர்கள் மாற்றம்

சென்னை அக் 21:: 
திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்கத் தவறியதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த லி.சித்ரசேனன் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொறுப்பை கூடுதலாக மாவட்ட வருவாய் அலுவலர் எம்.சம்பத்குமார் கவனித்து வந்தார். இப்போது புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்சியர் மாற்றம் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை
வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக கே.பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த இவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதோடு, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தஞ்சாவூர், வேலூர் மாவட்டங்களுக்கும் புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எம்.கருணாகரன் - திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் (முன்பு கோவை மாவட்ட ஆட்சியர்) அர்ச்சனா பட்நாயக் - கோவை மாவட்ட ஆட்சியர் ( முன்பு நீலகிரி மாவட்ட ஆட்சியர்) பி.சங்கர் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் (முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியர்) ஆர்.நந்தகோபால் - வேலூர் மாவட்ட ஆட்சியர் (முன்பு மதுரை மாநகராட்சி ஆணையர்) டாக்டர் என்.சுப்பையன் - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் (முன்பு தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர்).

No comments