Disqus Shortname

பட்டாசு பாதுகாப்புடன் வெடிக்க விழிப்புணர்வு பேரணி

உத்தரமேரூர் அக்,29
உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் குளோபல் செகண்டரி பள்ளியும்  தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையும் இணைந்து தீபாவளி பண்டிகை பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது பற்றி ஒரு நாள் பயிற்சி திங்கட்கிழமையன்று நடந்தது. குளோபல் பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.சாந்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் சுமதி குணசேகரன் தலைமை தாங்கி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  தீயணைப்புதுறை அலுவலர் பாஸ்கரன் மற்றும் தீயணைப்பு துறையினர் பள்ளி மாணவ மாணவியர் பேரூராட்சியில் இருந்து புறப்பட்டு பஜார் வீதி வழியாக தாலுக்கா அலுவலகம் அருகே முடிவுற்றது. தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிக்க பயன்படுத்த வேண்டிய முறைகள் பட்டாசுகளை வீட்டிற்கு வெளியே, திறந்த மைதானத்தில் வைத்து வெடிக்கச் செய்வது பாதுகாப்பானது. பட்டாசு கொளுத்தும் போது மிகவும் தளர்வான ஆடைகளை அணியக் கூடாது, முடிந்தவரை பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வெடிகளை, டின்.பாட்டில்களில் வைத்து வெடிக்கச் செய்யாதீர்கள். நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கச் செய்யுங்கள். எதிர்பாராவிதமாக உங்கள்மேல் தீ விபத்து ஏற்பட்டால், ஓடாதீர்கள்.உடனே தண்ணீர் ஊற்றி அணையுங்கள் அல்லது கீழே படுத்து உருளுங்கள். தீப்புண்ணுக்கு உடனே தண்ணீர் ஊற்றுங்கள் இங்க்,கிரீஸ்,எண்ணெய் போன்றவற்றை தீப்புண்ணில் தடவாதீர்கள். பாட்டாசு வெடிக்கும் போது எப்போதும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீர் அருகில் வைத்திருப்பது நல்லது என்று மாணவர்கள் கோஷமிட்டு சென்றனர்.

No comments