Disqus Shortname

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு, உத்தரமேரூரில் மொத்தம் 2,13,808. வாக்காளர்கள்

உத்தரமேரூர் அக்,02 
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29.29 லட்சம் வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் லி. சித்ரசேனன் வெளியிட்டார்.
காஞ்சிபுரம் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. ஆட்சியர் லி. சித்ரசேனன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, மாவட்ட வருவாய் அலுவலர் சம்பத்குமார் பெற்றுக் கொண்டார்.
அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் சேர்த்து 14 லட்சத்து 71 ஆயிரத்து 496 ஆண் வாக்காளர்களும், 14 லட்சத்து 57 ஆயிரத்து 804 வாக்களர்களும் என மொத்தம் 29 லட்சத்து 29 ஆயிரத்து 525 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டதைத் தொடர்ந்து, இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் லி. சித்ரசேனன் தலைமையில் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., வாலாஜாபாத் பா. கணேசன் எம்.எல்.ஏ., தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ஆர்.வி.குப்பன், தே.மு.தி.க. மாவட்டச் செயலர் அனகை முருகேசன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் நகரச் செயலர் சாட்சி சண்முகசுந்தரம், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் பலராமன், காஞ்சிபுரம் நகரத் தலைவர் ஓம்சக்தி பெருமாள், ஒன்றியச் செயலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூடுதல் வாக்குச் சாவடி மையங்களை அமைக்க வேண்டும். கட்சி சார்பில் போடப்படும் பூத் முகவர்களை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இது குறித்து தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார்.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிய உறுப்பினர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகள் அக்டோபர் இறுதிவரை நடைபெறும்.
இப்பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் 40 இன்டர்நெட் மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த மையங்கள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றார் ஆட்சியர் லி. சித்ரசேனன்.

உத்தரமேரூர்  ஆண் வாக்காளர்கள்    1,06,534, பெண் வாக்காளர்கள்    1,07,257, இதரர்        17         மொத்தம் வாக்காளர்கள்   2,13,808.

No comments