Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றிய தி.மு.க ஊராட்சி பேரூராட்சி வார்டு செயலாளர் தேர்வு சான்றிதழ் வழங்கும் விழா

உத்தரமேரூர் அக், 11
உத்தரமேரூர் ஒன்றியம் தி.மு.க ஊராட்சி வார்டு செயலாளர் பேரூராட்சி
வார்டு செயலாளர்களாக தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
உத்தரமேரூர் பி.டி.என்.திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை(11-10-13)  நடந்தது. ஒன்றிய கழக செயலாளர் இரா. நாகன் தலைமை தாங்கினார். பேரூர் கழக செயலாளர் என்.எஸ்.பாரிவள்ளல் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் க.சுந்தர் முன்னிலை வகித்து ஊராட்சி பேரூராட்சி  வார்டு செயலாளர்களுக்கு தேர்வு சான்றிதழ் வழங்கி பேசியது. வார்டு செயலாளர்கள் 18 வயது முடிந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் 31 வாக்கு சாவடிகளிலும் வாக்குகள் பட்டியலில்  தி.மு.க. வினர்  பெயர் உள்ளதா என்றும் இப்பணிகளை  20 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று கூறினார் க.சுந்தர். இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஞானசேகரன், மாவட்ட விவசாய அணி பொறுப்பாளர் சோழனுார் மா.ஏழுமலை, அவைத்தலைவர் ஏ.கே.சீத்தாராமன் ஒன்றிய துணைசெயலர் குமார் காக்கநல்லுார் டி.கே.கோபாலகிருஷ்ணன் பேரூராட்சி உறுப்பினர்கள் ஆ.சுந்தர், நா.உதயசூரியன், சுப்பராயன், போக்குவரத்து கழக பொறுப்பாளர் து.சுந்தர் வழக்கறிஞர் ஏ.கே.ரமேஷ்பாபு. பேரூராட்சி துணைச்செயலாளர் வெ.குணசேகரன், பேரூர் மகளிர் அணி துணை செயலர் ஜெயகாந்தா,
பேரூர் தலைவர் மணி, மாவட்ட பிரதிநிதி நீலகண்டன், நெமிலிபட்டுபாபு,
கோ.தவனகிரி எஸ்.ஆர்.அப்பாதுரை உட்பட 500க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர் தேர்தல் ஆணையர்கள் எஸ்.சந்தரு, வ.ஜெகன்னாதன், தா.முத்தீஸ்வரன், எஸ். கண்ணன் (எ) முருகன்
ச.தேவராஜன், ஆர்.வேலு பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.