Disqus Shortname

உத்தரமேரூர் பஸ் நிலையத்தில் "அம்மா' குடிநீர் பற்றாக்குறை

உத்தரமேரூர் அக்,03
 உத்­தி­ர­மேரூர்  பஸ் நிலையத்தில் "அம்மா' குடிநீர் விற்பனை நிலையத்தில் போதுமான குடிநீர் இல்லாததால் உத்­தி­ர­மேரூர்  பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.
உத்­தி­ர­மேரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்கள், சென்னை, காஞ்சிபுரம்,  ஆகிய பகுதிகளுக்குச் செல்லஉத்­தி­ர­மேரூர் பஸ் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள பஸ் நிலையங்களில் குறைந்த விலையில் "அம்மா' குடிநீர் கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து
 உத்­தி­ர­மேரூர் பஸ் நிலையத்திலும் குடிநீர் விற்பனை நிலையம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் உத்­தி­ர­மேரூர் பஸ் நிலையத்தில் உள்ள "அம்மா' குடிநீர் விற்பனை நிலையத்துக்கு தினமும் 12 பாக்ஸ் குடிநீர் (120 பாட்டில்கள்) மட்டுமே விற்பனை செய்ய வழங்கப்பட்டு வருவால் விற்பனை நிலையம் திறந்த சில நிமிடங்களிலேயே "அம்மா' குடிநீர் விற்பனை செய்யப்பட்டு விடுவதால், காலை 11 மணி முதல் மாலை வரை பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் "அம்மா' குடிநீர் கிடைக்காமல் அருகில் உள்ள கடைகளில் அதிக விலை கொடுத்து குடிநீர் பாட்டில்களை வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே உத்­தி­ர­மேரூர் பஸ் நிலையத்தில் உள்ள விற்பனை நிலையத்தில் அதிகமான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்­தி­ர­மேரூர் பஸ் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments