Disqus Shortname

அனைவருக்கும் கல்வி இயக்கம் குறு வளமைய பயிற்சி

உத்தரமேரூர் அக்,12
உத்தரமேரூர் வட்டார வளமையத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள் என்ற தலைப்பில் குறுவளமைய பயிற்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இப்யிற்சியை வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாணவர்களின் எதிர்கால அறிவியல் தேவைகளை கருத்தில் கொண்டு இயற்பியல், வேதியியல், உயிரியல், பாடம் சார்ந்த எளிய ஆய்வுகள் செய்து காட்டப்பட்டது. இதில் 41 பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பழனி, சேஷாத்திரி, தீனதயாளன் மற்றும் ஆசிரியர் அன்னலரசு ஆகியோர் செயல்பட்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.