Disqus Shortname

உத்திரமேரூர் அருகே டிராக்டர் டயர் வெடித்து முதியவர் பலி

உத்திரமேரூர் 19/06/2023
உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்போஸ்கோ 66 விவசாயி இவர் நேற்று முன்தினம் அம்மையப்பநல்லூர் கிராம சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசி சாலையில் உத்திரமேரூர் நோக்கி செங்கல் ஏற்றிக் கொண்டு டிராக்டர் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அம்மையப்பநல்லூர் கிராமத்தில் ஜான்போஸ்கோ அருகே வந்த போது எதிர்பாராத விதமாக டிராக்டரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டயரில் இருந்த இருப்பு ரிம் சாலையோரம் நடந்து சென்ற ஜான்போஸ்கோ மீதுபட்டது. இதில் பலத்த காயமடைந்த ஜான்போஸ்கோ ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார் ஜான்போஸ்கோவை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு சென்னை ராஜீகாந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜான்போஸ்கோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

No comments