Disqus Shortname

மாணவியை காதலிக்கும் போட்டியில் நண்பனே தீர்த்துக்கட்டியது அம்பலம்

உத்தரமேரூர் அக்,15

 உத்திரமேரூர் பழைய மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சதீஷ்குமார் (22). சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவர், சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமானார். தந்தை பெருமாள் கொடுத்த புகாரின்படி, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 5ம்தேதி உத்திரமேரூர் வளத்தோட்டம் பாலாற்று மேம்பாலத்துக்கு கீழ் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்து கிடந்தது சதீஷ்குமார் என தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் முதல்கட்டமாக சதீஷ்குமாரின் நண்பர் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவலின்பேரில் சதீஷ்குமாருடன் காஞ்சிபுரம் ஓட்டலில் வேலை செய்து வந்த திருத்தணி அருகே காஞ்சிப்பாடி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (19) மற்றும் 2 பேரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர். அப்போது 3 பேரும் சதீஷ்குமாரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
இது குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில், சதீஷ்குமாருக்கும் அவருடன் பணிபுரிந்த திருத்தணியைச் சேர்ந்த சண்முகத்துக்கும் (24) இடையை பிரச்னை இருந்துவந்தது தெரியவந்தது.இந்நிலையில், காஞ்சிபுரம் பழனிசெட்டித் தெருவைச் சேர்ந்த அருணின் (18) சகோதரியை சண்முகம் காதலித்து வந்தாராம்.
அதே பெண்ணை சதீஷ்குமாரும் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இதில் இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சண்முகம் கடந்த 1 மாதத்துக்கு முன்பு உணவகத்தில் இருந்து வேலையைவிட்டு நின்றுவிட்டார். மேலும் சதீஷ்குமார், சண்முகத்திடம் ரூ. 30 ஆயிரம் வரை கடன் பெற்றிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இரவு சதீஷ்குமாரை குடிப்பதற்காக அழைத்துச் சென்ற சண்முகம், அருண், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகியோர் பாலாற்று பகுதியில் அவரை வெட்டிக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.இதைத் தொடர்ந்து சண்முகம், அருண், சங்கர் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைப்பு 

கைதான 3 பேரையும் காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாட்கள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையொட்டி சண்முகம், அருண் ஆகியோரை சென்னை சைதாபேட்டை சப்–ஜெயிலில் அடைத்தனர்.17 வயது சிறுவனை மட்டும் சென்னை புரசைவாக்கம் கெல்லீஸில் உள்ள சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இவன், காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தற்போது பிளஸ்–2 படித்து வருகிறான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செ.விஜயகுமார் வெகுவாக பாராட்டினார்.


No comments