Disqus Shortname

மருத்துவ குழுவினர் முகாம் தொடர வேண்டும்

உத்திரமேரூர் அக்டோபர் 17, :

மர்ம காய்ச்சலை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை, மருத்துவ முகாம் தொடர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியம் ராவதநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட, ஆர்.என். கண்டிகை பகுதியில் சில நாட்களாக மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது.
சிகிச்சைகடந்த, 10ம் தேதியில் இருந்து, அப்பகுதியில், களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழு முகாம் அமைத்து சிகிச்சை அளித்தது.
அப்பகுதியில் சிலருக்கு காய்ச்சல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், மருத்துவக் குழு முகாம் இப்பகுதியில் தொடர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.அப்பகுதியைச் சேர்ந்த சூர்யா கூறுகையில், ஆர்.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்த மக்கள், கடந்த ஒருமாத காலமாக மர்ம காய்ச்சலால் அவதிபட்டு வருகின்றனர். சிகிச்சையால் சிலர் குணமடைந்து வந்தாலும், மற்றொரு புறத்தில் அடுத்தடுத்து பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மருத்துவக் குழுவினர் முகாமை தெடார வேண்டும், என்றார்.தொடரும் காய்ச்சல்ஊராட்சி தலைவர் அமுதா கூறுகையில், கடந்த மாதம், ராவதநல்லுார் மற்றும் ஆர்.என் கண்டிகை ஆகிய இரண்டு கிராமங்களிலும் பெரும்பாலானோருக்கு இக்காய்ச்சல் இருந்தது. தற்போது, ராவதநல்லுார் கிராமத்தில் முழுமையாக மக்கள் காய்ச்சலில் இருந்து விடுபட்டு உள்ளனர். ஆர்.என். கண்டிகை பகுதியிலும், மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சைகள் மூலம் காய்ச்சல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்து உள்ளது, என்றார்.வட்டார மருத்துவ அலுவலர் உமாதேவி கூறுகையில், ஆர்.என்.கண்டிகை பகுதியில், மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சல் தடுப்பு பணியினை மேற்கொண்டு வருகிறோம். தற்போது, காய்ச்சலுக்கு உள்ளானவர்களையும், காய்ச்சலில் இருந்து குணமானவர்களையும் தொடர்ச்சியாக, பரிசோதித்து வருகிறோம். மருத்துவக் குழுவினரின் தீவிர சிகிச்சைக்கு பிறகு, இப்பகுதியில், புதிதாக யாருக்கும் காய்ச்சல் ஏற்படவில்லை. என்றார்.

No comments