Disqus Shortname

உத்தரமேரூர் தேமுதிகவினர் தேர்தல் நிதி அளிப்பு

உத்தரமேரூர் அக்,28
 உத்தரமேரூர் ஒன்றிய தேமுதிக சார்பில், திங்கள்கிழமை தேர்தல் நிதி ரூ.2 லட்சத்தை வழங்கினர்.உத்தரமேரூரில் காஞ்சி தெற்கு மாவட்டம், தேமுதிக ஒன்றிய நகர செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.மாவட்ட கழக அவைத் தலைவர் எஸ்.தங்க.பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக பொருளர் எம்.ராஜேந்திரன் வரவேற்றார்.மாவட்ட துணைச் செயலர் வி.பி.ஜான், ஒன்றியச் செயலர் அழிசூர் வி.கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை கழகப் பேச்சாளர் தம்பிமுருகன், மாநில மாணவர் அணி துணைச்செயலர்  சங்கர், மாநில மீனவர் அணி துணைச்செயலர் கஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி செயலர் கலைச்செல்வி மற்றும் மாநில துணைச்செயலர் தேனி பி.முருகேசன், காஞ்சி தெற்கு மாவட்டச் செயலர் ஆர்.இரமேஷ் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உத்தரமேரூர் ஒன்றியம், பேரூர் சார்பில், கழக வளர்ச்சி நிதியாக ரூ.2 லட்சத்துக்கான காசோலையை மாநில கழக துணைச் செயலர் தேனி பி. முருகேசனிடம் ஒன்றிய பேரூர் கழக தே.மு.தி.க. நிர்வாகிகள் வழங்கினர்.

No comments