Disqus Shortname

உத்தரமேரூரில் இன்று சிறப்பு விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம்

உத்தரமேரூர் அக்,23
உத்தரமேரூர் 24-ம் தேதி வியாழக்கிழமையன்று காலை 9 மணி முதல்  மாலை 5 மணி வரை வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் சிறப்பு விரைவு பட்டா மாற்றும் சிறப்பு முகாம் நடக்கிறது. காஞ்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.பாஸ்கரன் தலைமையில் பட்டா மாறுதல் சம்மந்தமான முழுபுலம், மற்றும் உட்பிரிவு மனுக்கள் பெறப்பட உள்ளது. அது சமயம் பொது மக்கள் பட்டா மாற்றம் குறித்து மனு சமர்ப்பிக்கும் போது மனுதாரர் சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள். பத்திரத்தின்படி தொடர்புடைய உரிமையாளர் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும், உரிமைதாரரைத்தவிர வேறு நபர் விண்ணப்பத்தில் கையொப்பமிடக்கூடாது, மனுதாரரின் கையொப்பம் பத்திரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும், அசல் பத்திரத்தை இணைக்கக்கூடாது. கடைசியாக பதிவு செய்யப்பட்ட பத்தர நகல், தொடர்பு பத்திர நகல் மற்றும் மூலப்பத்திர  நகல் இணைக்க வேண்டும். பத்திரப்பதிவு நிகழ்ந்து 3 மாதத்திற்கு மேல் உள்ள இனங்களுக்கு கண்டிப்பாக மூலப்பத்திரம் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்த வில்லங்கச் சான்று நகல் இணைக்க வேண்டும், தேவையான இனத்திற்கு இறப்புச்சான்று (ம) வாரிசுக் சான்று நகல் தற்போதைய பசலி வரை நிலவரி செலுத்தப்பட்டு இரசீது நகல், உட்பிரிவு கோருதல் இடத்திற்குரிய எல்லைகள் நிர்ணயம் செய்திருக்க வேண்டும்,வீட்டுமனைக்குரிய கற்கள் நடப்பட்டிருக்க வேண்டும்.லே-அவுட் நகல் –உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கு மட்டும், மேற்கண்ட தகவலை உத்தரமேரூர் வட்டாட்சியர் சி.சாவித்திரி தெரிவித்தார்.

No comments