Disqus Shortname

வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

உத்தரமேரூர் செப்,05

உத்தரமேரூர் காஞ்சிபுரம் தொகுதி வாக்கு சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமையன்று வாலாஜாபாத்தில் நடைபெற்றது. மாவட்ட கழக செயலாளரும்,உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை உரையாற்றினார். காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.கமலக்கண்ணன், வாலாஜாபாத் ஒன்றிய குழு உறுப்பினர் என்.எம்.வரதராஜிலு வரவேற்றனர். இக்கூட்டத்தில் கழக மருத்துவ அணியின் மாநில தலைவரும், நாடாளுமன்ற (தனி) தொகுதி பொறுப்பாளருமான வா.மைத்ரேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியது. வாக்கு சாவடி முகவர்கள் 292+ 279 ஆக 571 ஆகவும் ஒன்றிய பூத் பொறுப்பாளர்கள் 200 பேர் வந்திருக்க வேண்டும் ஏனென்றால் மற்ற பாராளுமன்ற  தேர்தல் போல் இத்தேர்தல் இல்லை தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா நடைபெற  உள்ள பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாரத பிரதமராக அம்மா ஆட்சியில் அமர வேண்டும் அப்படி அம்மா   பிரதமராக ஆனால் 550 மெகா வாட் மின் கிடைத்து தமிழக மின் தட்டுப்பாடில்லாமல் கூடங்குளம் மின் உற்பத்தி கிடைக்கும் காவிரி பிரச்சனை நடுவர் மன்ற தீர்வு வந்து 2013 பிப்ரவரி 19-ம் தேதி இறுதி தீர்ப்பு மத்திய அரசு வெளியிட்டதா? தொடர்ந்து அக்டோபர் 4 ம் தேதி வரை முதல்வர் அம்மா கடிதங்கள் அனுப்பியும் எந்த வித முன்னேற்றமும்,  இல்லை வரும், 19 26 ம் தேதி சனிக்கிழமையன்று முகவர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் 50 சதவிதம் மகளிர் வாக்குகள் உள்ளதை நம் கட்சிக்கு வாக்களிக்க தீவிர முயற்சியில் இறங்க வேண்டும் இந்தியாவில் 79 கோடி இந்நிய மக்கள் உள்ளனர். 12 கோடி பேர் முதல்வருக்கு ஓட்டு போடலாம் தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடியே 16 லட்சம் மக்கள் உள்ளனர். காஞ்சி மாவட்டத்தில் 1659 பூத்கள் உள்ளது.  இளைஞர்கள் வேலை வாய்ப்பில் முன்னேறவும் எதிர் பார்க்கின்றனர். 18 வயது முதல் 22 வயது உள்ள மாணவ, மாணவியர் பயன்பெற தான் தமிழக முதல்வர் அம்மா இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையை அறிவித்தார்.  வாக்கு சாவடி முகவர்கள் குழு அமைத்து வீடு வீடாக சென்று 18 வயது நிரம்பியவர்களை புது வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் தேர்தல் ஆணையம் அளிக்கும் அடையாள அட்டையில் புகைப்படத்துடன் புது அட்டை பெற்றுக்கொள்ளலாம் கேட்க்கும் நிலையில் இருந்து கொடுக்கும் நிலையாக மாற தமிழக முதல்வர் அம்மா ஜெயலலிதா பாரத பிரதமராக வந்தால் தான் இந்தியா வளம் பெறும் நாடாக அமையும் என்று பேசினார். எம்.பி.வா.மைத்ரேயன். இக்கூட்டத்தில் ஒன்றியகுழு உறுப்பினர்கள் களியாம்பூண்டி தங்க.பஞ்சாட்சரம், சாலவாக்கம் வனிதாமுருகன், ஒன்றிய குழுத்துணைத்தலைவர் அ.ரவிசங்கர்,  ஒ.வி.வரதன், ஒன்றிய இளைஞரணி செயலாளர்   வி.எம்.கே.பி.வேலு ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை மாவட்ட குழு உறுப்பினர் சுமதிகுணசீலன், தண்டரை தணிகைவேல் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, வாலாஜாபாத்  பேரூராட்சி  தலைவர்  அக்ரி நாகராஜன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன், பி,வில்வபதி, பூந்தண்டலம் ராஜேந்திரன், திருப்புலிவனம் கார்வண்ணன், புலியூர் பழனி, அ.பி.சத்திரம் ஜி. பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய  கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை நன்றி கூறினார். 

No comments