Disqus Shortname

மணல் குவா­ரி­களின் அத்­து­மீ­றல் தொழிற்­சா­லை­களை தேடும் விவ­சா­யிகள்

உத்­தி­ர­மேரூர் அக் 21:
பினாயூர் பாலாற்றில் இயங்­கிய மணல் குவா­ரியால், அப்­ப­கு­தியில் பாலாற்று பாச­னத்தை நம்பி, விவ­சாயம் செய்ய இய­லாத நிலை ஏற்­பட்டு உள்­ளது. பினாயூர் பகு­தியை சேர்ந்த பெரும்­பா­லான விவ­சா­யிகள், கூலி வேலைக்கு தொழிற்­சா­லை­களை தேடி செல்லும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.
30 அடி ஆழத்திற்கு உத்­தி­ர­மேரூர் ஒன்­றியம் சால­வாக்கம் அடுத்­துள்­ளது பினாயூர் கிராமம். இங்கு, 2,000க்கும் மேற்­பட்டோர் வசிக்­கின்­றனர். விவ­சாயம் பிர­தான தொழி­லாக இருந்­தது. பாலாற்று நீரை நம்பி, விவ­சாயம் நடந்­தது. நெல், கரும்பு, வேர்க்­க­டலை மற்றும் தோட்ட பயிர்கள் பயி­ரி­டப்­பட்­டன.
இப்­ப­கு­தியை சுற்­றி­யுள்ள சீதா­வரம், அரும்­பு­லியூர், பழ­வேரி உள்­ளிட்ட கிரா­மங்­களை சேர்ந்த நுாற்றுக் கணக்­கானோர் பினாயூர் பகுதி நிலங்­களில், விவ­சாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்­தனர்.இந்­நி­லையில், பினாயூர் பாலாற்றங் ­க­ரையில், கடந்த ஆறு மாதங்­க­ளாக, மணல் குவாரி நடத்தப்­பட்­டது. குவா­ரியில் பின் பற்ற பட வேண்டிய விதி முறைகள், முற்றிலு­மாக மீறப்­பட்டு ஆற்­றங்­கரை­யோ­ரத்தில், 30 அடி ஆழத்தில் தோண்டி மணல் அள்­ள­ப்பட்­டது. இதனால், இப்­ப­கு­தியின் இயற்கை வளம் முழு­வ­து­மாக சூறை­யா­டப்­பட்­டது.
நிலத்தடி நீர் குறைந்தது  இது குறித்து, அப்­ப­குதி விவசாயி பாட்­ஷதி கூறியதாவது:பாலாற்று படு­கையில், நிலத்­தடி நீரை நம்பி, நெல், கரும்பு, வேர்க்­க­டலை உள்­ளிட்ட தோட்ட பயிர்கள் மற்றும் பூச்­செ­டி­க­ளையும் பயிர் செய்து வந்தோம்.தற்­போது, பினாயூர் பாலாற்றில், 30 அடி ஆழத்­திற்கு, தோண்டி மணல் எடுத்து விட்­டதால், நிலத்­தடி நீர் குறைந்­துள்­ளது. கடு­மை­யான வறட்சி நிலவும் சூழல் ஏற்­பட்­டுள்­ளது.இதனால் இப்­ப­கு­தியில் விவ­சா­யத்தில் நல்ல ஈடு­பாடு கொண்­டி­ருந்த இளை­ஞர்கள், தற்­போது, விவ­சா­யத்தை விட்டு, தொழிற்­சாலை­களை தேடி அலைந்து வருகின்­றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments