Disqus Shortname

உத்தரமேரூரில் இன்று மழை பெய்யும்

உத்தரமேரூர் அக்,29
ஆந்திர கடலோப் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் வட தமிழகத்திலும் அந்த காற்றழுத்தம் பரவியுள்ளதால் தமிழகத்திலும் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று மாமல்லபுரம் 110 மிமீ மழை பெய்துள்ளது. உத்திரமேரூர் 70 மிமீ, கலவாய், சென்னை 20 மிமீ, ஆலங்காயம், ஆம்பூர், செய்யார், அண்ணா பல்கலைக் கழகம் 10 மிமீ மழை பெய்துள்ளது.
இந்நிலையில் அந்த காற்றழுத்தம் ஆந்திர கடலோரம் முதல் தமிழக கடலோரப் பகுதி வரை பரவியுள்ளதால் தமிழகத்தில் இன்றும் பரவலாக மழை பெய்யும். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர்,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும்.

No comments