Disqus Shortname

3 வயது மகளை இழந்த தந்தை தற்கொலை! உத்திரமேரூரில் சோகம்




 உத்திரமேரூர் பேரூராட்சி கீழ் வெங்கடாச்சாரி தெருவை சேர்ந்தவர் ராமு 43 இவரின் மனைவி ராஜேஸ்வரி 38 இவர்களுக்கு ஜானவிகா 12, தர்ஷினி 07, அஸ்விதா 03 என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். ராமு சென்னை பூந்தமல்லியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு அங்கேயே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சாலை விபத்து ஒன்றில் தனது மூன்றாவது மகள் அஸ்விதா உயிரிழந்தார். இதனால் மனம் உடைந்த ராமு தனது சொந்த ஊரான உத்திரமேரூர்க்கு சென்று மகளின் இறுதிச் சடங்கினை நேற்று முடித்துள்ளார். தொடர்ந்து மகள் இழப்பினை கூறி வருத்தப்பட்டு கொண்டிருந்த ராமு இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறி கம்பியில் தனது வேட்டியை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமுவை பரிசோதனை செய்த மருத்துவர் ராமு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.