உத்திரமேரூர் அருகே சிறப்பு கிராம சபை கூட்டம்
உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சமூக தனக்கியாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பிரதமர் நினைவு குடியிருப்பு திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்பட்ட பணிகள் மற்றும் பணிகளில் குறைபாடுகள் குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் கிராம மக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை முறையாக முடித்து வைக்க அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சிகள் அம்மையப்பநல்லூர் கிராம மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments