Disqus Shortname

உத்திரமேரூரில் அதிமுக 55-ஆம் ஆண்டு தொடக்க விழா – எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!


உத்திரமேரூரில் ஒன்றிய மற்றும் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 55 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகர செயலாளர் ஜெயவிஷ்ணு முன்னிலையில் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பெருமாள் வரவேற்க நடந்த நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பஜார் வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் வரவிருக்கும் தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற பாடுபடுவோம் என சூலுறைக்கப்பட்டது. நிகழ்வின் போது மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் டைல்ஸ் சேகர், மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் விலவபதி, மாவட்ட மகளிரணி நிர்வாகி பானுமதிமணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஹரிகைலாசம், நகர தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராஜ்குமார், பாலாஜி, விஜி, சிலம்பரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.