Disqus Shortname

உத்திரமேரூர் அருகே மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் பலி!


உத்திரமேரூர், அக். 18:

உத்திரமேரூர் அருகே மின் கம்பி அறுந்து விழுந்ததில் மூன்று பசு மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே வேடபாளையம் கிராமம், ராஜி தெருவைச் சேர்ந்த பொன்னம்மாள் (70) என்பவருக்குச் சொந்தமான மூன்று பசு மாடுகள், நேற்று மாலை நீரடி கிராம எல்லைக்கு உட்பட்ட வயல்வெளிப் பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்தன.

அப்போது அப்பகுதியில் பலத்த காற்று வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் அங்கிருந்த மின் கம்பி அறுந்து பசு மாடுகள் மீது விழுந்ததாகத் தெரிகிறது. இதனால் மின்சாரம் தாக்கி மூன்று பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து உத்திரமேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கம்பிகளை முறையாகப் பராமரித்து, இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.