உத்திரமேரூர் அருகே 10,000 பனை விதைகள் நடவு – அக்னி சிறகுகள் அமைப்பு அசத்தல்!
உத்திரமேரூர் அடுத்த
மே
ட்டுப்பாளையம் கிராமத்தில் அக்னி சிறகுகள் அமைப்பு சார்பில் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளையொட்டி பனை விதை நடும் விழா நேற்று நடந்தது. தலைமை செயலக துணை செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தலின்படி நடந்த பனை விதை நடும் விழாவில் டாக்டர் தாமோதரன் தலைமையில் நடந்தது. தன்னார்வ இளைஞர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் கூறிய “பனை மரம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய ஒரு மிகச்சிறந்த இயற்கை வளம் நாட்டின் வளர்ச்சி பனை வளர்ச்சியில் தான்” என்பதை அடிப்படையாகக் கொண்டு நாஞ்சிபுரம், ஆழ்வராம்பூண்டி, அத்தியூர், மேல்தூளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்ச்சியாக பனை விதைகளை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு தொடர்ச்சியாக நேற்று கம்மாளம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அகரம்தூளி கிராம சாலையோரங்களில் சுமார் 10,000 பணம் விதைகளை நடவு செய்தனர். மேலும் மண் வளங்களை பாதுகாக்கவும் சுற்றுசூழலை பாதுகாக்கவும் பனை விதைகளை தொடர்ந்து நடுவோம். இயற்கை வளங்களை பாதுகாப்போம் என்பது குறித்தான உறுதிமொழி ஏற்றுக் கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர். நிகழ்வின் போது தனியார் கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வ இளைஞர்கள் பலர் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
No comments