Disqus Shortname

உத்திரமேரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் ஆயுத பூஜை விழா கோலாகலம்!

உத்திரமேரூர்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களைச் சுத்தம் செய்து, வண்ணத் தோரணங்கள் கட்டி, குங்குமம் இட்டு அலங்கரித்தனர். பின்னர், அனைத்து ஆட்டோக்களையும் ஒரே இடத்தில் அணிவகுத்து நிறுத்தி, சிறப்பு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட ஆட்டோக்களில் ஓட்டுநர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்கு சங்கத்தின் கௌரவத் தலைவர் ஜெய விஷ்ணு தலைமை வகித்தார். தலைவர் ராஜசேகர், நாகா, ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் பேரூராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பங்கேற்று விழாவைச் சிறப்பித்தனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.