Disqus Shortname

உத்திரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சிறப்பு கடன் முகாம்


 உத்திரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சிறப்பு கடன் முகாம் நேற்று நடந்தது. முகாமில் உத்திரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்க செயலாளர் உமாதேவி தலைமை தாங்கினார். முகாமில் சிங்கப் பெண்கள் கடன் உதவிகள் மற்றும் வீட்டு வசதிக் கடன்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் மற்றும் நடுத்தர விவசாய கடன், ஊரக தொழில் கடன், வீட்டு அடமான கடன், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையருக்கான கடன், மின்சார ஆட்டோ கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கப்படும் எனவும் எனவே பொது மக்கள் கடன்களை பெற்று குறித்த நேரத்தில் செலுத்தி பயன்பெற அறிவுறுத்தப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு உத்திரமேரூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கடன்கள் வழங்கப்படும் விதிமுறைகள் குறித்து துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை அலுவலர்கள் பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.