Disqus Shortname

மீனாட்சியம்மாள் குளோபல் பள்ளி 3-ம் ஆண்டு விழா

உத்தரமேரூர் ஏப்-29
உத்தரமேரூர் மீனாட்சியம்மாள் குளோபல் பள்ளி 3-ம் ஆண்டு விழா சனிக்கிழமையன்று நடந்தது.  மீனாட்சியம்மாள் நிறுவனத்தலைவர் ஏ.என்.இராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  மீனாட்சி மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் எம்.சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை எம்.தெய்வநாயகி வரவேற்றார்.  பள்ளி முதல்வர் எஸ்.சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.  துணை முதல்வர் ஜே.மேரிஸ்டெல்லா தொகுப்புரையாற்றினார்.  மீனாட்சியம்மாள் கல்வி நிறுவன முதன்மை கல்வி அலுவலர் அருணாஅப்பாசாமி, காவல்துறை ஆய்வாளர் பி.ராஜேந்திரபிரசாத் வாழ்த்திபேசினார்கள்.  கலைநிகழ்ச்சி மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு நிர்வாகிகள் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.  மீனாட்சியம்மாள் கல்வி அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். பள்ளி மாணவி எஸ்.எ.ஆதித்யபூஜா நன்றி கூறினார். 

No comments