Disqus Shortname

தமிழக முதல்வரை டெல்லி செங்கோட்டைக்கு பிரதமராக அனுப்புவோம் நாஞ்சில் சம்பத் பேச்சு

உத்தரமேரூர் ஏப்,28
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை டெல்லி செங்கோட்டைக்கு பிரதமராக அனுப்புவோம். கழக கொள்கை பரப்பு  துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் மேலும் பேசியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா பட்ஜெட்டில் கல்வி துறைக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். 12ஆயிரம் கறவை பசுக்கள்  வழங்கவும் நிலமற்ற ஏழைப்பெண்களுக்கு நான்கு ஆடுகள் வழங்க பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி அளிக்க  முன்னுரிமை அளித்துள்ளார்.  தமிழகத்தில் பொருளாதார நிலைமை சீராகவுள்ளது. தமிழக முதல்வரின் மதிநுனுட்பமும் நிர்வாக துறைதான் காரணம் தமிழக செயின்ஜாஜ் கோட்டையில் இருக்கும் அம்மாவை டெல்லி செங்கோட்டைக்கு பிரதமராக டிரான்ஸ்வர் செய்ய தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும். வரும் பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு நலத்திட்ட உதவி செய்துகொண்டே இருக்கும் அம்மாவிற்க்கு தமிழக மக்கள் நன்றி கடன் செலுத்த வேண்டும் இந்திய அரசியல் வரலாற்றில் தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த கட்சி அ-தி.மு.க அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் 95 சதவீதம் வெற்றி  பெற்றது.வரலாற்றில் இடம் பிடித்து அந்த சரித்திரத்தை பெற்றது அ.தி.மு.க  தொடர் மின் வெட்டுக்கு காரணம் அ.தி.மு.க அல்ல. கடந்த தி.மு.க ஆட்சி காலத்தில் நிர்வாக கோளாறுதான் மின் தடைக்கு காரணம். வெளி மாநிலத்தில் இருந்து  மின் சாரம் சப்ளை செய்ய கூட மின் தடம் பராமரிப்பு செய்ய கருணாநிதி விட்டதால் வெளி மாநிலத்து மின்சாரம் வழங்ககூடிய சூழ்நிலை இல்லை. தமிழக முதல்வர் அம்மா துணிச்சலுடன் சட்ட பேராட்டங்களை  உட்சநீதி மன்றம் கதவை தட்டி காவேரி நீதி மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட செய்து காவேரி டெல்டா குடும்பங்களின் வாழ்வில் விளக்கேற்றியுள்ளவர் அம்மாதான் என்று பேசினார். நாஞ்சில் சம்பத்.உத்தரமேரூர் மேற்கு கிழக்கு ஒன்றியம் பேரூர் கழகத்தின் சார்பில் கழக அரசின் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம்.  உத்தரமேரூர் பேருந்து நிலையத்தில் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை நடந்தது. காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார்.. ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு, ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்றத்தலைவர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, வரவேற்றார்கள்.  இக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா, காஞ்சி சட்டமன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர், மொளச்சூர் இரா.பெருமாள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட பலர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பொ.சசிகுமார் நன்றி கூறினார்.

No comments