Disqus Shortname

உத்தரமேரூர் தாலுக்காவில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு


உத்தரமேரூர் ஏப்,16
காஞ்சி மாவட்ட ஆட்சியர் எல்.சித்திரைசேனன் உத்தரவின் பேரில் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பே.அமுதவல்லி தலைமையில் காஞ்சி மாவட்ட முழுவதும் 12ம் தேதியிலிருந்து வீடு வீடாக ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும 6 வயது 14 வயது வரையிலும் மேலும் 15வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி செல்லா குழுந்தைகள், இடையில் நின்ற மாணவர்கள், பள்ளி செல்லா மாற்றுத்திரனாளி குழந்தைகள் செங்கல் சூளை, அரிசி ஆலை, வெளி மாநிலங்களில் இருந்து கட்டிட பணி மேற்கொள்ளும் கூலி தொழிலாளி பிள்ளைகள் இவர்களை கணக்கெடுத்து முறையான பள்ளிகளில் சேர்க்கப்பட்டு அரசின் 14 வகை விளையில்லா பொருட்கள் வழங்கப்பட உள்ளது- நரிக்குறவர்கள் இருளர்கள் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுத்து அப்பகுயிலேயே பயிற்சி மையங்கள் உத்தரமேரூர் ஒன்றியத்தில் 390 குடியிருப்புகளில் தொடர்ந்து இப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் தலைமை ஆசிரியர் ஆசிரியைகள், கிராம கல்வி குழு உறுப்பினர்கள். தொண்டு நிறுவனங்கள், என்.சி.சி. என்.எஸ்.எஸ்.மாணவர்கள் பங்கேற்றுனர். மேற்கண்ட தகவலை மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் கே.அமுதவல்லி தெரிவித்தார். உத்தரமேரூர் வட்டாரத்தில் வட்டார வளமைய மேற்பார்வைளாளர் ஏ.இராஜேந்திரன் துவக்கி வைத்தார்.       

No comments