Disqus Shortname

உத்தரமேரூர் அரசுப் பள்ளி மாணவிக்கு இளம் விஞ்ஞானி விருது


உத்தரமேரூர் ஏப்,06
 உத்தரமேரூர் தாலுக்கா அரசாணிமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பயிலும் மாணவி வெண்ணிலா இளம் விஞ்ஞானி பட்டம் பெற்றதற்கு அண்மையில் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் 5 ஆயிரம் காசோலையும், சான்றிதழும் வழங்கி பாராட்டி பேசினார். இவ்விழாவில் சேர்மென் ஆர்.கமலக்கண்ணன், துணைச்சேர்மென் அ.ரவிசங்கர் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு ஊராட்சி மன்றத்தலைவர்  முருவம்மாள் செல்வம் சுப்புரெட்டி, கூடுதல் உதவி தொடக்கக்கல்வி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இராஜேந்திரன் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் குமார் வரவேற்றார்.  பள்ளிதலைமை ஆசிரியர் சுந்தரவரதன்  நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.