Disqus Shortname

குறைதீர்க்கும் முகாம்களில் குவிந்த கோரிக்கை மனுக்கள்

உத்தரமேரூர் ஏப்,17

உத்தரமேரூர் ஒன்றியத்தில் அம்மா திட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமையன்று நடை பெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம்களில் 500 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. உத்தரமேரூர் வட்டத்திற்க்குட்பட்ட மேல்பாக்கம், சிறுதாமூர், சிறுபினாயூர் ஆகிய ஊராட்சிகளில் அம்மா திட்டத்தின் கீழ் செயல்படுத்தபடும் குறை தீர்க்கும் முகாம் ஏப்,16 (செவ்வாய்) அன்று வருவாய் துறை சார்பில் நடைபெற்றது- அரும்புலியூர் குறுவட்டம், சிறுதாமூர், ஊராட்சியில் உள்ள அருங்குன்றம் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் சிறுதாமூர், பட்டா, அருங்குன்றம் ஆகிய கிராமங்களில் இருந்து 300 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை தொடர்பானவைகள் உழவர் பாதுகாப்பு அட்டை கோரியும் 212 மனுக்கள் வரப்பட்டன. இவற்றில் 142 மனுக்கள் உடனடியாக பரீசீலணை செய்து தீர்வு காணப்பட்டது. மீதம் 70 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இம்முகாமில் காஞ்சிபுரம் கோட்ட கலால் அலுவலர் தாமோதரன், உத்தரமேரூர் வட்ட வழங்கல் அலுவலர் எல்.மணிவண்ணன், வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் கிராமநிர்வாக அலுவலர் வெங்கடேசன் ஒன்ற்ய பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் மற்றும் அருங்குன்றம், மதுார் ஊராட்சி மன்ற தலைவர்கள் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். களியாம்யூண்டி குறுவட்டம் மேல்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் பட்டா மாற்றுதல், குடும்ப அட்டை உழவர் பாதுகாப்பு அட்டை தொடர்பானவை குறித்து 135 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.பரீசீலனை செய்யபட்டதன் பேரில் 40 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உத்தரமேரூர் வட்டாட்சியர் கே.தேவராஜன், மண்டல துணை வட்டாட்சியர் கலைமணி வருவாய் ஆய்வாளர் ஞானவேல், கிராம நிர்வாக அலுவலர் பூங்குழல் ஊராட்சி மன்றதலைவர்கள் கே.முனிரத்தினம், தண்டபாணி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சாலவாக்கம் குறுவட்டம் சிறுபினாயூர் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் பல்வேறு குறைபாடுகள் குறித்து 129 கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. இவற்றில் பரீசீலணை செய்ததில் 38 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது- 54 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவ்வூராட்சி 37 மனுக்கள் நிராகரிக்கபட்டுள்ளது- குறிப்பிட தக்கதாகும், முகாமினில் உத்தரமேரூர் தனி வட்டாட்சியர் கிரிஜா, சாலவாக்கம் மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமி, வருவாய் ஆய்வாளர் பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், கவுன்சிலர் வனிதா முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments