Disqus Shortname

உத்தரமேரூர் பஜார் வீதியில் சிமெண்ட் சாலை பணி அடிக்கல் நாட்டுவிழா

உத்தரமேரூர் ஏப்-12
உத்தரமேரூர் பஜார்வீதியில் சென்னை – வந்தவாசி செல்லும் பிரதான சாலையை
ரூ.54 லட்சத்தில் 7.5 மீ சிமெண்ட் சாலையான  (பெரியார் சிலை வரை)
அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமையன்று நடந்தது.
அதிமுக காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி
சட்டமன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார்.  ஒன்றிய
குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். காஞ்சி மாவட்ட
ஆட்சித்தலைவர் எல்.சித்திரசேனன் அடிக்கல் நாட்டி கற்பூர தீபம் ஏற்றினார்.
இவ்விழாவில் ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை, கே.பிரகாஷ்பாபு,
மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,
பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், எம்.கே.பி.வேலு, அ.பி.சத்திரம்
ஜி.பெருமாள், புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.