Disqus Shortname

அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்,

 உத்தரமேரூர் ஏப்,29
உத்தரமேரூர் மேற்கு, கிழக்கு ஒன்றியம், பேரூர் அ.தி.மு.க. சார்பில் அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், உத்தரமேரூர் பஸ் நிலையம் அருகில் (26-04-203) நடந்தது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியபோது,
’’முதல்வர் ஜெயலலிதா பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளார். 12 ஆயிரம் கறவைப் பசுக்கள் வழங்கவும், நிலமற்ற ஏழைப் பெண்களுக்கு நான்கு ஆடுகள் வழங்கவும் பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி அளிக்க முன்னுரிமை அளித்துள்ளார்.
 தமிழகத்தில் பொருளாதார நிலைமை சீராக உள்ளது. இதற்கு முதல்வரின் மதிநுட்பமும் நிர்வாகமும் தான் காரணம். தொடர் மின் வெட்டுக்கு, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்த நிர்வாகக் கோளாறுதான் காரணம்.
மின் தடங்களை பராமரிப்பு செய்ய கருணாநிதி விட்டுவிட்டதால், வெளி மாநிலத்து மின்சாரம் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. காவிரி நீர் பிரச்னையில், முதல்வர் ஜெயலலிதா சட்டரீதியாகப் பேராட்டங்களை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிடச் செய்து காவிரி டெல்டா விவசாயிகளின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளார்’’ என்றார்.

No comments