Disqus Shortname

உத்தரமேரூரில் மின் வெட்டை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்


உத்தரமேரூர் ஏப்,16

உத்தரமேரூர் தாலுக்கா அலுவலகம் எதிரில் செவ்வாய்கிழமையன்று தமிழகத்தில்
நிலவும் தொடர் மின்வெட்டைக்கண்டித்து உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதி
இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கே.பி.கரிகாலன் தலைமை தாங்கினார்.  இளைஞர் காங்கிரஸ் கட்சி முன்னாள்
மாவட்ட தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன் மின்வெட்டை கண்டித்து கண்டன
ஆர்ப்பாட்ட உரையாற்றினார். மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்
ஏ.அகதியப்பமுதலியார், பி.ஏ.சின்னைப்பா பெருநகர் ராசரத்தினம் என்கிற சிவா,
முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்,ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் காங்கிரஸ் உத்தரமேரூர் சட்ட மன்ற தொகுதித்தலைவர் சந்தோஷ்குமார்
வரவேற்றார். களியாம்பூண்டி நாராயணசாமி, வட்டார தலைவர்
பி.கே.சுப்பிரமணியன் பேசினார்கள்  ஆர்.ராமகிருஷ்ணரெட்டியார் நன்றி
கூறினார்.
 

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.