Disqus Shortname

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் கொட்டும் மழையில் அமைச்சர்கள் ஆய்வு

உத்தரமேரூர் ஏப்,24
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரை அடுத்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாயலயத்தை புதன்கிழமையன்று வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமாள், மற்றும் கால்நடை துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா கொட்டும் மழையில் நனைந்து கொண்டே பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மதுராந்தகம் தாலுக்காவில் சென்னைக்கு தென்மேற்கே 82 கி.மீ. தொலைவில்  29.58 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், இங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் முதல் ஜீலை மாதம் வரை  திறக்கப்பட்டு பறவைகளின் வருகையை பொது மக்கள் பார்வையிட ஏற்பாடு செய்ய படுகிறது. இங்கு சிறியநீர் நாகம், பாம்புத்தாரை, நத்தைகுத்தி நாரை, மிலிர்உடல்அறிவாள்மூக்கன், வன்ணநாரை, கூழைக்கடா, வெள்ளைஅறிவாள்மூக்கன் போன்ற 30ஆயிரத்திற்க்கு மேற்பட்ட 36 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இப்போது பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் வனத்துறை அமைச்சர் கே.டிபச்சைமாள்  மற்றும் டி.,கே.எம்.சின்னைய்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த பறவைகளின் சரணாலயத்தில் கட்டணமாக பெரியவர்க்கு ரூ.5 ம் சிறியவர்க்கு ரூ.2ம் கேமிரா எடுக்க ரூ,25 ம் வீடியோ கேமிரா எடுக்க ரூ,150 ம் வசூலிக்கப்படுகிறது. வருடத்திற்கு 9 மாதங்கள் திறந்திருக்கும்.பறவைகள் சரணாலயத்தில் மூலம் கிடைக்கும் தொகை சுமார் ரூ.11 லட்சத்தை தாண்டும். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கனிதா சம்பத், ஒன்றியகுழு தலைவர் பிரமிளா விவேகானந்தம். காஞ்சி மாவட்ட ஒன்றிய குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், தலைமை வன உரியின பாதுகாப்பு தலைவர் பகவான்சிங், வன உயிரின பாதுகாப்பாளர், கிண்டி, கீதாஞ்சலி கூடுதல் முதன்மை தலைமை (வன பாதுகாப்பாளர் வன உயிரினம்) பிரகாசம் மற்றும் கழகபொருப்பாளர்கள் உறுப்பினர்கள் னைவரும் கலந்துகொண்டார்கள்.

No comments