Disqus Shortname

ஆசிரியை கொலை தலைமறைவாக இருந்த கணவன் பிடிபட்டார்

"போதையில் மனைவியை கொலை செய்துவிட்டேனே'ஆசிரியை கொலை வழக்கில் கணவர் கதறல்

உத்திரமேரூர்:பெருநகர் அருகே, மனைவியை கொலை செய்து விட்டு, தப்பியோடிய கணவர், நேற்று முன்தினம், காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது, "போதையில் மனைவியை கொலை செய்துவிட்டேனே,' என, காவலர்களிடம் கதறி, கதறி அழுதார்.பெருநகர் அடுத்த, மானாம்பதி கண்டிகையைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், 40; அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி பேரரசி, 32. இவரும், பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு, விஷ்வா, 2, என்ற குழந்தை உள்ளது. கமலக்கண்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.கதவை திறக்க மறுப்புகடந்த, 7ம் தேதி இரவு, 11:30 மணிக்கு, வீட்டிற்கு வந்த உறவினர்களை வழியனுப்ப சென்ற கமலகண்ணன், வீடு திரும்பும் வழியில் மது அருந்தி உள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் வீட்டிற்கு வந்தார். அவர் குடித்திருப்பதை அறிந்த பேரரசி, கதவை திறக்க மறுத்துவிட்டார். மேலும், தனது தந்தையை அலைபேசியில் தொடர்பு கொண்டு, கமலக் கண்ணன் தினமும் குடித்துவிட்டு வருவதாகவும், தொடர்ந்து அவரோடு வாழ முடியாது என்றும் கூறியுள்ளார்.இதை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த கமலக்கண்ணன், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து, பேரரசியுடன் வாக்கு வாதம் செய்துள்ளார். இதில், பேரரசி, கமலக் கண்ணனை தள்ளியதாக கூறப்படுகிறது. போதையில் இருந்த கமலக்கண்ணன், தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அவர் கையில் சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொலைமனைவி தன்னை தாக்கி விட்டதாக கருதிய கமலக்கண்ணன், ஆத்திரமடைந்து, மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்தார். அதைத் தொடர்ந்து, தன் குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பின், கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற அவர், குழந்தையை அவர்கள் பராமரிப்பில்விட்டுவிட்டு, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளார்.இந்நிலையில், கொலை வழக்கு சம்பந்தமாக தன்னை தேடி வரும் போலீசார், உறவினர்கள் சிலரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனது தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்ட கமலக்கண்ணன், காவல் நிலையத்தில் சரண் அடைய முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து, மறைமலை நகர் காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். உத்திரமேரூர் காவல்துறையினர் அவரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.காவலர்களிடம் கதறல்குடிபோதையில் மனைவி பேரரசியை கொலை செய்த கமலக்கண்ணனுக்கு, சீட்டாட்டம் உள்ளிட்ட சில பழக்கங்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் சரணடைந்த அவரிடம், காவலர்கள் விசாரித்தனர்.
அப்போது, "குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேனே,'' என்று கதறி அழுதுள்ளார். காவலர்கள் அவரை தேற்றி, விசாரணையை தொடர்ந்தனர்.

No comments