Disqus Shortname

இலவச தொழிற்பயிற்சி துவக்க விழா


உத்தரமேரூர் ஏப்,10
மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு துறையில் பரிந்துரை செய்யப்பட்ட உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரியும் புதுவாழ்வு திட்டமும் இணைந்து உத்தரமேரூர் தாலுக்கா புலிவாய் ஊராட்சி கன்னிகுளம் கிராமம். ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதன்கிழமையன்று இலவச தொழிற்பயிற்சி துவக்க விழா நடந்தது. ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் வி.ராஜ்குமார், உத்தரமேரூர் மீனாட்சி அம்மாள் பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் கே.ராஜா துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நா.ராஜி, எஸ்.நாகமணி, சமுதாய மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் வி.ராஜேந்திரன் புள்ளியியல் ஆய்வாளர் வி.தீபக் திட்ட விளக்க உரையாற்றினார். இம்முகாமில் தையல் பயிற்சி, எம்ராய்டரிங், மெழுகுவர்த்தி, ஒயர் கூடை பின்னுதல், பினாயில், கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரித்தல் வீட்டுஒயரிங் தமிழக அரசின் மிக்சி, பேன், கிரைண்டர், பழுதுபார்த்தல் ஆகிய பயிற்சிகள் ,இலவசமாக 6 மாதங்களுக்கு பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படும் என்று பேசினார்கள் புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜே-மணிகண்டன் நன்றி கூறினார்.

1 comment:

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.