Disqus Shortname

உத்தரமேரூரில் மறு கூட்டுறவு தேர்தல் நடத்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உத்தரமேரூர் ஏப்,17

உத்தரமேரூர் கூட்டுறவு தேர்தலில் ஆளுங்கட்சியினர் அராஜக தலையீட்டால் சட்ட விரோதமாக தேர்தல் நடந்துள்ளதாகவும் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உத்தரமேரூர் பஸ் நிலையம் அருகில் செவ்வாய்கிழமையன்று(16-04-2013) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உத்தரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, உத்தரமேரூர் பால் உற்பத்தியாளர் சங்கம், நிலவள வங்கி, கூட்டுறவு பண்டக சாலை மற்றும் உத்தரமேரூர் வட்டத்திற்க்குட்பட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் இதனை கூட்டுறவு தேர்தல் ஆணையம் தலையிட நடைபெற்ற தேர்தலை ரத்து செய்திட வேண்டும் வேட்பு மனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்பட்டு உரிய முறையில் மறு தேர்தல் நடத்திட ஏற்பாடு செய்ய வேண்டும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் வட்டக்குழு சிறுபான்மையினர். வி.கே.பெருமாள் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சொ.பாஸ்கரன் மற்றும் பா.தர்மராஜன், டாக்டர் த.சோழன், இ.ராஜ்குமார் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள். சி.ஐடியு சுமைப்பணிலோடு ஆட்டோ, போக்குவரத்து பணிமணை உள்ளிட்ட சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தா நன்றி கூறினார்.

No comments