Disqus Shortname

உத்தரமேரூர் ஒன்றியத்தில் 754 பேன், மிக்ஸி, கிரைண்டர், வழங்கும் விழா

உத்தரமேரூர் ஏப்-22
உத்தரமேரூர் ஒன்றியத்தில் திங்கட்கிழமையன்று விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர் வழங்கும் விழா நடந்தது.  ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.  தாசில்தார் கே.தேவராஜன் வரவேற்றார். இடையம்புதூர் கிராமத்தில் 314, காட்டாங்குளம் கிராமத்தில் 300, அமராவதிபட்டினத்தில் 140 ஆக மொத்தம் 754 விலையில்லா பேன், மிக்ஸி, கிரைண்டர்களை வழங்கி உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன்  கலந்துகொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி பாராட்டிபேசினார். இவ்விழாவில் கே.ஆர்.தருமன், ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.அண்ணாமலை, குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஒழையூர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், சாலவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வனிதாமுருகன், திருவந்தவார் முருகன், ஆதவப்பாக்கம் கோதண்டன், ரமேஷ், பி.ஜி.ரஞ்சித் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments