Disqus Shortname

புதுவாழ்வு திட்டம் இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம்

உத்தரமேரூர் ஏப்,25
உத்தரமேரூர் தாலுக்கா புதுவாழ்வு திட்டம் திருப்புலிவனம் பகுதிக்கு உட்பட்ட வாடாதவூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இலவச பொது மருத்துவ சிகிச்சை முகாம் வியாழக்கிழமையன்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஐ.சதீஷ் தலைமை தாங்கினார். முகாமில் 120 நபர்கள் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றனர்.. கண்புறை உள்ளவர்கள் 7 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். முகாமில் சர்க்கரை பரிசோதனை கண் பரிசோதனை இரத்த அழுத்த பரிசோதனை நரம்பியல், எலும்பு, மருத்துவம், மகளிர் மற்றும்  குழந்தைகள் மருத்துவம் பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது. புதுவாழ்பு திட்ட அணித்தலைவர் ஜே.மணிகண்டன் வரவேற்று நன்றி கூறினார்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.