Disqus Shortname

சித்திரை புத்தாண்டு உழவர் பெருவிழா மகளிர் குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்தில் அமுத சுரபி நிதி வழங்கும் விழா


உத்தரமேரூர்.
உத்தரமேரூர் தாலுக்கா திருப்புலிவனம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று(ஏப்,15) சித்திரை புத்தாண்டு உழவர் பெருவிழா மகளிர் குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்தில் அமுதசுரபி நிதி வழங்கும் விழா இராமர்கோவிலில் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார், துணைத்தலைவர்  அ.ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சரளா பிரகாஷ்பாபு முன்னிலை வகித்தனர். புதுவாழ்வு திட்ட அணித்தலைவர் ஜெ.மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். உத்தரமேரூர் தொகுதி சட்ட பேரவை உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் கலந்துகொண்டு அமுத சுரபி 20  குழுக்களுக்கு ரூ.9.70 லட்சத்திற்க்கான காசோலைகளும் வேளாண்மைதுறை மூலம் உத்தரமேரூர் வேளாண்மை உதவி இயக்குனர் ஆர்.கிருஷ்ணவேணி காஞ்சி வேளாண்மை இணைஇயக்குநர் சௌந்தரராஜன் இரண்டு பவர் டில்லர் குழு மாநிலத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு நெல்விதைக்கும் கருவி களையெடுக்கும் இயந்திரத்தை  வழங்கி எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். தமிழக அரசு வேளாண்மைத்துறை வேளாண்மையில் இரண்டாம் பசுமைபுரட்சி ஏற்படுத்த 14.04.2013 முதல் 20.05.2013 வரை அனைத்து வருவாய் கிராமங்களில் உழவர் பெருவிழா வேளாண்மைத்துறை மூலம் கொண்டாடப்படுகிறது. ஞாயிறன்று உத்தரமேரூர் வட்டாரத்தில் திருப்புலிவனம்,கருவேப்பம்பூண்டி, கன்னிகுளம் ஆகிய கிராமங்களில்  உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர். வாலாஜாபாத் பா.கணேசன்.  பி.ஜனோன், இணைந்துகொண்டு விழாவிற்க்கான  சிறப்பாக அமைக்கப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்டத்தை கொடியசைத்து துவக்கி வைத்து வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு துறை வேளாண்மை பொறியியல் துறை வேளாண்மைவிற்பனை துறை விதை சான்று துறை பால்வளத்துறை கூட்டுறவுத்துறைகளால் விவசாயிகளுக்கு தமிழக அரசு மூலம் வழஙகப்படும் தொழில்நுட்பங்களையும் மான்யங்களையும் பயன்படுத்தி விவசாயிகள் இரண்டாக பசுமை புரட்சியை ஏற்படுத்தி வேளாண்மை உற்பத்தியை இருமடங்காகவும் வருமானத்தை முப்பாகங்களையும் பெருக்கி தமிழ் புத்தாண்டு பரிசுகளை கலந்துகொண்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது- இவ்விழாவில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு ஒன்றிய குழு உறுப்பினர்  கார்வண்ணன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஊராட்சி செயலாளர் கே.ஆர்.தருமன்,ஒழையூர் ஆர்.நாராணயசாமி, உட்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் அமரேசன் நன்றி கூறினார். .

No comments