Disqus Shortname

உத்தரமேரூர் ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் 19-ம் தேதி துவக்கம்

உத்தரமேரூர் ஏப்-16

உத்தரமேரூர் ஸ்ரீஆனந்தவல்லி சமேத ஸ்ரீசுந்தரவரதராஜபெருமாள் கோயில்
பிரம்மோற்சவம் 19-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று த்வஜாரோஹணம் துவங்குகிறது.
21-ம் தேதி ஞாயிற்றுகிழமையன்று கருடசேவையும், 25-ம்தேதி
வியாழக்கிழமையன்று திருத்தேர் உற்சவமும், 27-ம் தேதி சனிக்கிழமை
தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.
கோயில் ஸ்தலவரலாறு ஏகமூர்த்தியாக ஸ்ரீசுந்தரவரதன் அவரைச் சூழ்ந்த மூன்று
மூர்த்திகளாக ஸ்ரீஅச்சுதவரதன், ஸ்ரீஅநிருத்தவரதன் மற்றும்
ஸ்ரீகல்யாணவரதனாக முதல் நிலையிலும், நான்கு மூர்த்திகளாக
ஸ்ரீவைகுண்டவரதன், ஸ்ரீகிருஷ்ணஸ்ஜுணன், ஸ்ரீயோக ந்ருஸிம்மன் மற்றும்
ஸ்ரீலஷ்மிவராஹனாக இரண்டாம் நிலையிலும், இந்த எட்டு மூர்த்திகளுக்கும்
தலையாய ஆதிகேசன் மீது போகசயனத்தில் உள்ள புண்ணியமூர்த்தியாக
ஸ்ரீரங்கநாதன் மும்மூர்த்திகளாய் ஸ்ரீபூதேவி, மார்கண்டேய ஸகிதமாய் கங்கா
யமுனா த்வாரபாலகிகளோடு மூன்றாம் நிலையிலும், ஒரே விமானத்தில் ஒன்பது
மூர்த்திகளாய் காட்சியளிக்க இத்தனித்தன்மையை முதற்பாடலிலும்,
திருக்கோவிலின் மூன்றாம் நிலையில் ஒரு விதானம் போல், பாற்கடலில் துயில்
கொண்ட ரூபமாய் அரவணையில் காட்சியளிக்கும் தனித்தன்மையை இரண்டாம்
பாடலிலும், உத்தரமேரூர் திருக்கோயிலின் ஈடில்லா வடிவமைப்பை
திருமழிசையாழ்வார் தன்னுடைய திருச்சந்தவிருத்தத்தில் வியந்து
பாடிப்போற்றுகிறார்.  உயர்வற உயர்நலம் உடையபெருமாள் உத்தரமேரூர் உறைபவனாக
பத்மகோச அஷ்டாங்கவிமானத்தில் எழுந்தருளி பஞ்சவரதனாக, நவமூர்த்தியாக
நின்று, இருந்து, கிடந்து அடியவர்க்கு மெய்யனாக ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா
சமேதரான ஸ்ரீசுந்தரவரதராஜப் பெருமாளின் திவ்யத்தை பொய்கையாழ்வார்,
பேயாழ்வார் திருமழிசையாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரும்
மெய்யுருக மங்களாஸாஸனம் செய்யப்பெற்று ஸகல பக்த ஜனங்களுக்கும் பேரருள்
புரியும்படிக்கும் தனக்கு ப்ரம்மோத்ஸவம் நடத்திக்கொள்ள திருவுள்ளம்
பெற்றபடி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை
தர்மகர்தா ஆர்.சேஷாத்ரி செய்துவருகிறார்.

No comments